வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்ட மூலத்திற்கு எதிரான கவனயீர்பு போராட்டம் யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக இன்றைய தினம் வியாழக்கிழமை முன்னெடுக்கபப்ட்டது.
இதன் போது “மக்களை நிம்மதியாக வாழ விடுங்கள்” , “பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனே ரத்து செய்ய வேண்டும்” உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பதாகைகள் ஆர்ப்பாட்டகார்களால் நடாத்தப்பட்டது.இதன்போது பொதுமக்கள் பதாதைகளைத் தாங்கியவாறு அமைதியான முறையில் போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
இதேளை பயங்கரவாத எதிர்ப்பு சட்டம் அவசியமற்றது என்பதை வலியுறுத்தி வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஏற்பாட்டில் முன்னெடுக்கப்பட்ட கவனயீர்ப்பு நிகழ்வு இன்று காலை 10.30 மணியளவில் மன்னார் நகர சுற்று வட்ட பகுதியில் இடம்பெற்றது.
இதன் போது வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் பிரதிநிதிகளுடன் மன்னார் மாவட்ட பெண்கள் இணைந்து குறித்த கவனயீர்ப்பு நிகழ்வை முன்னெடுத்தனர்.
பயங்கரவாத எதிர்ப்பு சட்டத்தை உடனடியாக நிறுத்த கோரி குறித்த பெண்கள் அமைப்பினரால் அறிக்கை ஒன்றும் மக்கள் பார்வைக்கு வெளியிடப் பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது