தாய்லாந்தில் கடந்த 3 ஆண்டுகளில் 12 நண்பர்களுக்கு சயனைட் கொடுத்து கொலை செய்ததாக சாராரத் சிங் எனும் கர்ப்பிணிப் பெண் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தாய்லாந்து தலைநகர் பாங்காங் நகரை சேர்ந்த சாராரத்சிங் சிவுதாபார்ன் (32). கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரிபோர்ன் என்ற தோழியுடன் ரட்சாபுரி மாகாணத்திற்கு சுற்றுலா சென்றிருந்த நிலையில் சிரிபோர்ன் திடீரென மயங்கி விழுந்து உயிாிழந்துள்ளார். அத்துடன் அவரது கைபேசி , பணம், பேர்ஸ் ஆகியவை காணாமல் போயிருந்தன. இதையடுத்து அவரது உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனை செய்த பாங்கொங் காவல்துறையினா் அவர் சாப்பிட்ட உணவில் சயனைட் எனும் கொடிய விஷம் கலந்திருந்தமையை கண்டுபிடித்தனா்.
. . இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினா் சாராரத் சிங் சிவுதாபார்னிடம் விசாரணை மேற்கொண்ட போது . சாராரத் சிங் தனது முன்னாள் காலதன் உள்பட 12 பேரை சயனைட்கொடுத்து கொலை செய்தது தெரியவந்துள்ளது. இந்த கொலைகளை கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் முதல் 2023 ஆம் ஆண்டு ஏப்ரல் வரை அவர் செய்திருந்ததும் தெரியவந்தது. கொலையானவர்கள் அனைவரும் 33 வயது முதல் 44 வயதை சேர்ந்தவர்களாக இருக்கலாம் என தொிய வந்துள்ளது. அவர்களிடம் இருந்து பணம் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்களை திருடுவதற்காக இந்த கொலைகளை செய்துள்ளதாக காவல் துறையினர் தெரிவித்துள்னர்.
மேலும் சாராரத் உயர் காவல்துறை அதிகாரி ஒருவரின் முன்னாள் மனைவி எனவும் அவா் . அ தற்போது கர்ப்பமாக உள்ளார். எனவும் தொிவித்துள்ள காவல்துறையினா் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணையின் போது அவர் மன உளைச்சலில் இருக்கிறார் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். அனைவரையுமே சயனைட் கொடுத்து ஒரேமுறையில் கொன்றிருக்கிறார். விசாரணைகளின் போது இறந்தவர்களின் உறவினர்கள் தங்கள் உறவினரின் நகைகள், பணம் உள்ளிட்ட விலை உயர்ந்த பொருட்களை காணவில்லை என தொிவித்துள்ளனா். . எனவே கொலைக்கான நோக்கம் பணம்தான் என காவல்துறையினா் தெரிவித்துள்ளனா்.