இந்திய வடகிழக்கு மாநிலமான மணிப் பூரில் தேர்தல் பிரச்சாரத் துக்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று செல்லவுள்ள நிலையில், அம்மாநிலத்தின் இருவேறு பகுதிகளில் வெடிகுண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
மணிப்பூரில் 60 தொகுதிகள் கொண்ட சட்டப்பேரவைக்கு எதிர்வரும் மார்ச் 4 மற்றும் 8ம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறவுள்ளது. பாஜக வேட்பாளர்களுக்காக பிரதமர் நரேந்திர மோடி இம்பாலில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்ளவுள்ளார்.
பிரதமரின் வருகையை முன்னிட்டு பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள மைதானத்தை சுற்றியுள்ள பகுதிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட வேளை அப்போது மைதானத்துக்கு அருகில் இரு இடங்களில் சீனாவில் தயாரிக்கப்பட்ட கையெறி குண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மோடியின் வருகைக்கு கடும் எதிர்ப்புகள் நிலவி வருகின்ற நிலையில் இன்று மாநிலம் தழுவிய முழு அடைப்புப் போராட்டத்துக்கும் அழைப்பு விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.