189
புனர்வாழ்வும் புது வாழ்வும்’ என்ற அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கிலான நடைப்பயணம் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை நடைபெற்றது. ஐக்கிய ராஜ்யத்தை தளமாகக் கொண்டு இயங்கும் குறித்த அமைப்பின் ஊடாக வறிய மக்களுக்கு அடிப்படை வசதிகளை பெற்றுக் கொடுக்கும் வேலைத் திட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலைமையில் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
யாழ்ப்பாணத்தில் ஆரம்பமான நடைபவனியில் ஐக்கிய ராஜ்யத்தை சேர்ந்த இளைஞன் ஒருவர் 55 கிலோ மீற்றர் வரை நடைப் பயணம் மேற்கொண்டு நிதியினைத் திரட்டி குடிநீர் அற்ற மக்களுக்கு கிணறுகளை அமைத்துக் கொடுத்தல் மற்றும் வீடற்றோருக்கு வீடுகளை கட்டிக் கொடுத்தல் பாடசாலைகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்தல் போன்றவற்றிற்காக செலவிடவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
Spread the love