இந்த ஆண்டு நடைபெற்ற International Indian Film Academy Awards விருது விழாவில் நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது வழங்கப்பட்டது. விக்ரம் படத்தின் காட்சிகளை திரையிட்டு நடிகர் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருது அறிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியை பொலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன் தொகுத்து வழங்கினார்.
களத்தூர் கண்ணம்மாவில் இருந்து விக்ரம் வரை ஏகப்பட்ட பிளாக்பஸ்டர் படங்களையும் தரமான படங்களையும் கொடுத்து தமிழ் சினிமாவையும் இந்திய சினிமாவையும் உலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு கொண்டு சென்ற உலகநாயகன் கமல்ஹாசனுக்கு வாழ்நாள் சாதனையாளருக்கான விருதினை இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் அபுதாபியில் நடந்த விழாவில் வழங்கினார்.
சர்வதேச இந்திய அகாடமி விருதுகள் வழங்கும் விழா IIFA குழுவினரால் ஆண்டுதோறும் இந்திய சினிமாவில் சாதனை படைத்த பிரபலங்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அபுதாபியில் பிரம்மாண்டமாக நடைபெற்ற இந்த விழாவில் தமிழ் சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் பலரும் பொலிவுட்டின் முன்னணி நடிகர்களும் பங்கேற்றிருந்தனர்.