Home இலங்கைகஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலம் பதிவு

கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் வாக்குமூலம் பதிவு

by admin

 

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும்  நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இன்று(16) கிளிநொச்சி   காவல்துறை அத்தியட்சகர் அலுவலகத்தில்   வாக்குமூலமளித்துள்ளார்.

கடந்த 3 ஆம் திகதி யாழ்ப்பாணம் – மருதங்கேணியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் வாக்குமூலம்   வழங்குவதற்காக   இன்று அழைக்கப்பட்டிருந்த  அவாிடம்  காவல்துறையினா்  4 மணித்தியாலங்களுக்கு மேல்   வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

இதேவேளை, த  தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மகளீர் அணி தலைவி வாசுகி சுதாகரன், மகளீர் அணி செயலாளர் கிருபா கிரிதரன்,  நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் ஆய்வாளர் ஆரோக்கியநாதன் தீபன்திலீசன் மற்றும் சாரதி  ஆகிய நான்கு பேரிடமும் இன்று வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன்  அவா்கள்  கிளிநொச்சி நீதவான் நீதிமன்றத்தில்  முன்னிலைப்படுத்தப்பட்டு  அடுத்து,   தலா 2 லட்சம் பெறுமதியான  பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More