மத்திய அமெரிக்கா நாடான ஹோண்டுராஸ் நாட்டின் தலைநகர் டெகுசிகல்பா அருகே உள்ள தமரா பகுதியில் உள்ள பெண்கள் சிறைச்சாலையில் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 41 பெண் கைதிகள் எரித்தும் சுட்டும் கொல்லப்பட்டுள்ளனா்.
குறித்த சிறைச்சாலையில் ஏராளமான பெண் கைதிகள் அடைக்கப்பட்டு உள்ள நிலையில் சிறையில் பெண் கைதிகள் இரண்டு குழுக்களாக பிரிந்து மோதிக் கொண்டதில் கலவரம் வெடித்தது. சிறைக்குள் துப்பாக்கிகளால் சுட்டுக் கொண்டதுடன் சிலர் மீது தீ வைத்தும் எரித்தனர்.
கலவரத்தை கட்டுப்படுத்த அதிகாரிகள் தீவிர நடவடிக்கை எடுத்த போதும் கைதிகள் ஆவேசத்துடன் மோதிக் கொண்டதால் . நீண்ட போராட்டத்துக்கு பின்னரே கலவரத்தை கட்டுக்குள் கொண்டு வந்தனர். சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 41 பெண் கைதிகள் உயிரிழந்துள்ளனர். எனவும் அதில் 26 பேர் தீ வைத்து எரித்து கொல்லப்பட்டுள்ளனர் எனவும் தொிவிக்கப்பட்டுள்ளது. கைதிகள் பலா் படுகாயம் அடைந்துள்ள நிலையில் அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.
பெண்கள் சிறையில் மாரா கும்பலுக்கும் பாரியோ 18 கும்பலுக்கும் இடையே இருந்து வந்த மோதல் கலவரமாக வெடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.