Home உலகம்வளர்த்த கடா மார்பில் பாய்கிறது – புட்டின் VS வெக்னா்!

வளர்த்த கடா மார்பில் பாய்கிறது – புட்டின் VS வெக்னா்!

by admin

வெக்னா் எனப்படும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ் ஒன் டொன் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றியதாக சா்வதேச செய்திகள் தொிவிக்கின்றன.

ரஷ்யா – உக்ரைன் போர் கடந்த 1 வருடங்களுக்கு மேல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் போரில் ரஷ்ய பாதுகாப்பு படையினருடன் இணைந்து ´வெக்னா்´ எனப்படும் தனியார் ராணுவ அமைப்பு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தி வந்தது. ஆனால் இந்த ராணுவ குழு தற்போது ரஷ்யாவிற்கு எதிராக திரும்பி உள்ளது. இது ரஷ்யாவுக்கு புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

வெக்னா் அமைப்பு ரஷியாவின் மிகப்பெரிய தனியார் ராணுவ அமைப்பாக செயல்படுகிறது. பெரிய ஆயுதங்களை வைத்து கொடுமையான தாக்குதல் நடத்துவதற்கு பெயர் போன இந்த அமைப்பு பணம் பெற்று கொண்டு தாக்குதல் நடத்தும் கூலிப்படையாக செயல்பட்டு வருவதாக தொிவிக்கப்படுகிறது.

சமீபகாலமாக ரஷ்யா ராணுவ அதிகாரிகள் மீதும், வெக்னா் அமைப்பின் மீதும் தொடர்ந்து அடக்குமுறைகளை செயல்படுத்தி வருவதாக அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி பிரிகோஸ் தெரிவித்துள்ளார்.

மேலும் உக்ரைனுக்கு எதிரான போரின் போது தங்களுக்கு சரியான ஆயுதங்களை வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார். அதனால் ஆத்திரமடைந்த வெக்னா் அமைப்பு தற்போது ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி உள்ளது.

இது தொடர்பாக யெவ்ஜெனி பிரிகோஸ் வெளியிட்டுள்ள குரல் பதிவில், “நாங்கள் 25 ஆயிரம் பேர் இருக்கிறோம், நாங்கள் சாவதற்கு கூட தயாராக உள்ளோம், ரஷ்யாவை கட்டாயம் வீழ்த்துவோம், ஏற்கனவே நாங்கள் பல பகுதிகளை கைப்பற்றி உள்ளோம், எங்கள் வழியில் யார் குறுக்கே வந்தாலும் துவம்சம் செய்வோம்” என்று தெரிவித்துள்ளார், மேலும் தங்களுடன் இணைந்து ரஷ்யா மக்களும் இணைந்து செயல்படவும் அழைப்பு விடுத்துள்ளார்.

இதற்கிடையே வெக்னா் அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஒன்-டொன் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை கைப்பற்றி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால் கோபமடைந்த ரஷ்யா, கடும் எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த அமைப்பின் தலைவர் யெவ்ஜெனி புரிகோஸை கைது செய்யவும் கிளர்ச்சியாளர்களை கண்டதும் சுடவும் உத்தரவிட்டுள்ளது.

ரஷ்யா முழுவதும் இராணுவ படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ரஷ்யா ஜனாதிபதி புடின், “வாக்னர் அமைப்பின் இந்த செயல் மிகப்பெரிய தேசத்துரோகம், உள்நாட்டு துரோகம் உட்பட எந்த அச்சுறுத்தல்களிலிருந்தும் எங்கள் மக்களையும் நமது நாட்டையும் பாதுகாப்போம்” என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் ரஷ்யா னாதிபதி புடின் விரைவில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் என அந்நாட்டின் அரசு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உக்ரைன் படை ரஷ்யாவுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில் தற்போது சொந்த நாட்டின் தனியார் இராணுவ அமைப்பு நாட்டுக்கு எதிராக திரும்பி இருப்பது ரஷ்யாவிற்கு பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More