Home இலங்கைதமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

தமிழக கடற்தொழிலாளர்கள் விளக்கமறியலில்

by admin

இலங்கை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட 15 தமிழக கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ,ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
யாழ்ப்பாணம் நெடுந்தீவு கடற்பரப்பிற்குள்  நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரு படகுகளில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட இராமேஸ்வரத்தைச் சேர்ந்த  கடற்தொழிலாளர்களே கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட 15 தமிழக கடற்தொழிலாளர்களும்,  அவர்கள் பயணித்த இரு படகுகளும் காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு கொண்டு வரப்பட்டு,  கடற்றொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக, நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை  ஊர்காவற்துறை நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட போது , அவர்களை எதிர்வரும் ஜூலை 21ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More