139
மட்டக்களப்பு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், காந்தி பூங்கா முன்பாக மேற்கொண்டு வரும் சத்தியாக்கிரக போராட்டம் ஏழாவது நாளாக இன்றும் தொடர்கிறது.
இந்தநிலையில், இன்று காலை சத்தியாக்கிரக போராட்டம் நடைபெறும் இடத்திற்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களும் மாகாணசபை உறுப்பினர்களும் சென்று போராட்டக்காரர்களை சந்தித்துள்ளனர். மேலும் கறுப்புப் பட்டியணிந்து பாராளுமன்ற உறுப்பினர்களும், மாகாணசபை உறுப்பினர்களும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆதரவாக போராட்டத்தில் இணைச்து கொண்டனர்.
Spread the love