Home உலகம்ஆப்கானிஸ்தானில் கனமழை – 26 பேர் உயிரிழப்பு – 40க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

ஆப்கானிஸ்தானில் கனமழை – 26 பேர் உயிரிழப்பு – 40க்கும் மேற்பட்டோரைக் காணவில்லை

by admin

 

மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால்   ஏற்பட்ட  திடீர்  வெள்ளத்தில் சிக்கி இதுவரை 26 பேர் உயிரிழந்துள்ளதுடன் 40க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாக  தொிவிக்கப்பட்டுள்ளது. . மேலும் இந்த திடீர் வெள்ளப்பெருக்கால் வீடுகள் மற்றும் விவசாய நிலங்கள் பெரும் சேதமடைந்துள்ளதாகவும்  மைதான் வார்டக் மாகாணத்தின் ஜல்ரேஸ் மாவட்டத்தில் உள்ள முக்கிய பேரிடர் மண்டலத்திற்கு அவசர உதவிகளுக்காக மீட்புக் குழு விரைந்துள்ளதாக  தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை கடந்த வெள்ளிக்கிழமை முதல் நாடு முழுவதும்  ஏற்பட்டுள்ள வெள்ளத்தில் சிக்கி மொத்தம் 31 பேர்  உயிாிழந்துள்ளனா் எனத் தொிவிக்கப்பட்டுள்ளது.    மேலும்   ஜல்ரெஸில் 604 வீடுகள் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ சேதமடைந்துள்ளதாகவும், நூற்றுக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் மற்றும் பழத்தோட்டங்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  மேலும் நாடு முழுவதும், “கடந்த நான்கு மாதங்களில், இயற்கை பேரழிவு தொடர்பான சம்பவங்களில் 214 பேர்  உயிாிழந்துள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More