335
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் உயிர்கொல்லி போதைப்பொருளான ஹெரோயினுடன் கைதான இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
மானிப்பாய் காவற்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் ஹெரோயின் போதைப்பொருள்களுடன் இரு பெண்கள் உள்ளிட்ட நால்வர் நேற்று முன்தினம் சனிக்கிழமை (29.07.23) கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட நால்வரிடமும் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்த காவற்துறையினர் நால்வரையும் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மல்லாகம் நீதவான் முன்னிலையில் முற்படுத்தினர்.
அதனை அடுத்து நால்வரையும் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
Spread the love