Home இலங்கையாழில். பாதை தொடர்பில் இரு வீட்டாருக்கு இடையில் முரண் –03 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

யாழில். பாதை தொடர்பில் இரு வீட்டாருக்கு இடையில் முரண் –03 மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரை

by admin
 யாழ்ப்பாணத்தில் இரு வீட்டாருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாட்டில் மூன்று மோட்டார் சைக்கிள்கள் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.   யாழ்ப்பாணம் கட்டுவான் பகுதியில் நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

அப்பகுதியில் வசிக்கும் இரு வீட்டாருக்கு இடையில் , பாதை தொடர்பில் நீண்ட காலமாக முரண்பாடு ஏற்பட்டு வந்துள்ளது . இந்நிலையில் ஒரு வீட்டில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவர் தங்கி இருந்தார். அவர் தான் தங்கியிருந்த வீட்டாருக்கு ஆதரவாக வன்முறை கும்பல் ஒன்றினை கூலிக்கு அமர்த்தி , அவர்களுடன் முரண்பட்ட வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டதுடன், வீட்டில் நின்ற இரு மோட்டார் சைக்கிளையும் வன்முறை கும்பல் தீக்கிரையாக்கி உள்ளது.
குறித்த வன்முறை கும்பல் வீட்டின் மீது தாக்குதல் மேற்கொண்டு , வீட்டில் இருந்த மோட்டார் சைக்கிள்கள் இரண்டை தீக்கிரையாக்கி விட்டு தப்பி செல்ல முற்பட்ட வேளை பாதிக்கப்பட்ட வீட்டார் வன்முறை கும்பலை துரத்திய போது , அவர்கள் தப்பி செல்லும் போது ஒரு மோட்டார் சைக்கிளை கைவிட்டு சென்றுள்ளனர். அதனை வீட்டார் தீக்கிரையாக்கி உள்ளனர். சம்பவம் தொடர்பில்  காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More