சர்வதேசமகளிர் தினத்தை முன்னிட்டுபெண்களின் உரிமையை பாதுகாக்கவும் வலுவூட்டுவதற்காகவும் பெண்களின் குரலினை ஓங்கிஒலிக்கச் செய்வதற்கான பிரச்சார நடைபவனி இன்று(01.03.2017) கிளிநொச்சியில் ;இடம்பெற்றது.
மகளிர் மற்றும் சிறுவர் விவகாரஅமைச்சின் அனுசரனையுடன் கிளிநொச்சிமாவட்டசெயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட குடும்ப அலகினூடாக மகிழ்ச்சியான சமூகத்தினை உருவாக்குவதன் முக்கியத்துவத்தினை உணர்த்தும் வகையில் ‘மகிழ்ச்சியான குடும்பவாழ்க்கையின் பெறுமதிக்கு ஒரு புதிய அர்த்தத்தினை கொடுத்தல்’என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற நடைபவனியானது கிளிநொச்சிமாவட்ட செயலகத்தில் ஆரம்பமாகி ஏ9 வீதியூடாக டிப்போசந்திவரை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் பிரதமவிருந்தினராக கலந்துகொண்ட மாவட்டஅரசஅதிபர் சுந்தரம் அருமைநாயகம் அவர்கள் தனதுஉரையில் கிளிநொச்சிமாவட்டத்தில் 7000ற்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவகுடும்பங்கள் உள்ளனர். அவர்களில் 3500ற்கும் மேற்பட்ட கணவரை இழந்த பெண்கள் தமது வாழ்க்கையினை பல்வேறு வாழ்வியல் பிர்ச்சனைகளுக்கு முகம் கொடுத்து பல சவால்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகின்றனர்,
இவர்களின் பாதுகாப்பை வலுவூட்டவும் இவர்களுக்கான உரிமைகளை பெற்றுக்கொடுக்கவும், பெண்களுக்கான சமத்துவத்தினை வெளிப்படுத்தவும் இந் நடைபவணி மக்களுக்கு விழிப்புணர்வாக அமையும் எனதெரிவித்தார்.
தொடர்ந்து சிறப்பு விருந்தினராக கிளிநொச்சி வாழ்வின ;எழுச்சிபணிப்பாளர் திருமதிஆரணிதவபாலன் அவர்கள் பங்குபற்றிபெண்கள் உரிமை மற்றும் வலுவூட்டல் தொடர்பில் சிறப்புரைஆற்றினார்.
இந்நடைபவனியில்’உள்ளுராட்சிஅமைப்புகளில் பெண்களுக்கான 25 வீதம் பிரதிநிதித்துவத்தினைஉறுதிப்படுத்துவோம்’,’நீங்கள் வெளிநாடுகளில் சிந்தும் வியர்வைதான் எங்கள் அன்னியச் செலாவணி’,’தைக்கும் பெண்களே! எங்களுடையவெளிநாட்டுவருமானம்’, ‘தொல்லைகள்,வன்முறைகள்,போதைவஸ்து அற்ற குடும்பமாகவாழ்வோம்’, ‘பலம் மிக்கநாட்டைஉருவாக்குவோம், பெண்களைவலுப்படுத்துவோம், நாளைய நாளை அழகாக்குவோம’; போன்றவாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு நடைபவனியில் மேலதிகஅரசாங்க அதிபர் சி.சத்தியசீலன், கரைச்சிபிரதேசசெயலாளர் கோ.நாகேஸ்வரன்,உதவிமாவட்டசெயலாளர் த.பிருந்தாகரன், திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன், பிரதமகணக்காளர் கில்பேர்ட் குணம்,மாவட்டமற்றும் பிரதேசசெயலகஉத்தியோகத்தர்கள்,கிளிநொச்சி மாவட்ட பெண்கள் அமைப்புகள், முன்பள்ளிஆசிரியர்கள், மற்றும் தொழிற்பயிற்சிநிலைய மாணவர்கள் எனபலர்பங்குபற்றியிருந்தனர்.தேசியரீதியில் சகலமாவட்டங்களிலிலும் ஒரேநேரத்தில் இந் நடைபவனி இடம்பெற்றதுகுறிப்பிடத்தக்கது