Home இலங்கைநெடுந்தீவில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

நெடுந்தீவில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது

by admin

 

இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 13 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் சனிக்கிழமை இரவு மீன் பிடியில் ஈடுபட்டிருந்த வேளை அப்பகுதியில் சுற்றுக்காவல் நடவடிக்கையில் ஈடுபட்ட கடற்படையினர்களால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  அதன் போது கடற்தொழிலாளர்களின் 03 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

கைது செய்யப்பட்டுள்ள கடற்தொழிலாளர்களை மயிலிட்டி துறைமுகத்திற்கு அழைத்து வந்து , மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழில் நீரியல் வள திணைக்களத்தின் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்த கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More