Home இலங்கைமன்னார் தென் கடலில் இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

மன்னார் தென் கடலில் இறந்து கரை ஒதுங்கிய கடல் ஆமைகள்

by admin
 

மன்னார் தென் கடல் பகுதியில்     கடல் ஆமைகள் இறந்து கரை ஒதுங்கி வருவதாக அப்பிரதேச மக்கள் தெரிவித்ததை தொடர்ந்து வன ஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு  சென்று உயிரிழந்த ஆமைகளை மீட்டுள்ளனர்.

கடந்த மூன்று தினங்களாக மன்னார் தென்கடல் பிராந்தியத்தில் அதிகமான கடல் ஆமைகள் இறந்து கடலில் மிதந்து வருவதாகவும் அத்துடன் அதிகமான ஆமைகள் இறந்த நிலையில் மன்னார் சிலாவத்துறை பகுதி கடற்கரைப் பகுதிகளில் கரையொதுங்கி வருவதாகவும்  தெரிய வந்துள்ளது.

இது தொடர்பாக வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதிகாரிகள் இன்று (16) அப்பகுதிக்கு  சென்று   நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தொடர்ந்து கடந்த மூன்று தினங்களாக ஆமைகள் கரையில் ஒதுங்கி வருவதுடன் மேலும்  ஆமைகள் கடலில் மிதந்து வருவதாகவும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More