காஸா மீது இஸ்ரேல் நேற்று (24) ஒரே நாளில் நடத்திய தாக்குதலில் 704 பேர் கொல்லப்பட்டுள்ளனா். காஸா மீது இஸ்ரேல் தாக்குதல் தொடங்கியதில் இருந்து ஒரே நாளில் பதிவான அதிக உயிரிழப்பு இது என பாலஸ்தீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இஸ்ரேல் , ஹமாஸ் அமைப்பினர் மீது வான்வழி தாக்குதல் மேற்கொண்டு வருகின்ற நிலையில் நேற்று 400-க்கும் மேற்பட்ட ஹமாஸ் அமைப்பினாின் இலக்குகளை தாக்கியதாகவும், ஏராளமான ஹமாஸ் அமைப்பினரை கொன்றதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
எனினும், இஸ்ரேலின் தாக்குதலில் காஸாவில் 2360 குழந்தைகள் உட்பட 5791 பேர் பலியாகியுள்ளதாக காஸாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இஸ்ரேலின் தாக்குதல்களால் காஸாவில் ஏராளமான கட்டடங்கள் இடிந்து தரைமட்டமாகியுள்ள நிலையில் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் மருத்துவ மனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இதேவேளை , எரிபொருள் தீர்ந்து விட்டதால் காஸாவில் அனைத்து மருத்துவமனைகளும் முடங்கியுள்ளதனால் காயமடைந்தவர்கள் சிகிச்சை பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.
இந்தநிலையில் காஸாவுக்கு எரிபொருளை அனுப்ப அனுமதிக்க வேண்டும் என இஸ்ரேலை உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன. காஸாவில் தண்ணீர் பற்றாக்குறையும் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது