Home இலங்கைபாடசாலை மாணவர்களுக்கு   போதை குளிசைகளை  விநியோகித்தவர்     கைது

பாடசாலை மாணவர்களுக்கு   போதை குளிசைகளை  விநியோகித்தவர்     கைது

by admin
  
 
 
 
நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு   போதை குளிசைகளை  விநியோகித்து வந்த    சந்தேக நபர் தொடர்பில்  கல்முனை விசேட அதிரடிப்படையினர்  விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 
அம்பாறை மாவட்டம் கல்முனை விசேட அதிரடிப்படை முகாமிற்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல் ஒன்றினை அடுத்து  புதன்கிழமை(25)  இரவு காரைதீவு  காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட அம்பாறை காரைதீவு பிரதான  வீதியில்   வைத்து   சந்தேக நபர் 500 போதை குளிசைகளுடன்     கைதானார்.
 
 
இவ்வாறு கைதான நபர்  அம்பாறை திசாபுர பகுதியை   சேர்ந்த  28 வயது  மதிக்கத்தக்கவர்  என்பதுடன் சந்தேக நபர்   வசம் இருந்து 500 போதை குளிசைகள்  உட்பட  சந்தேக நபர்  பாவித்த கைத்தொலைபேசி  என்பன  விசேட அதிரடிப்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
 
   கைது செய்யப்பட்ட நபர் உள்ளிட்ட  சான்று பொருட்களுடன் காரைதீவு    காவல்துறையினரிடம்  நீதிமன்ற நடவடிக்கைக்காக பாரப்படுத்தியதுடன் விசேட அதிரடிப்படையினர் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டுள்ளனர்.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More