Home இலங்கைமன்னாரில் நீண்ட கால போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது. 

மன்னாரில் நீண்ட கால போதைப் பொருள் கடத்தல் சந்தேகநபர் கைது. 

by admin

மன்னாரில் நீண்ட காலமாக போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படும் சந்தேக நபர் ஒருவர்  போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக   காவல்துறையினா் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் மன்னார் தாராபுரம் கிராமத்துக்கு அருகாமையில் நேற்று புதன்கிழமை (01) இரவு 9 மணியளவில் நடைபெற்றதாக   காவல்துறையினா் மேலும் தெரிவித்துள்ளனர்.

 
இராணுவப் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலைத் தொடர்ந்து இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் மன்னார்   காவல்துறை  குற்றப் புலனாய்வு பிரிவினருடன் இணைந்து மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் போது இச் சந்தேக நபர் போதைப் பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

5150 போதைப்பொருள் மாத்திரைகள் உடனே 30 வயதுடைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இப் போதைப்பொருள் மாத்திரைகள் இந்தியாவிலிருந்து கடல் மார்க்கமாக கொண்டு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப் பொருள் மாத்திரைகளையும் மேலதிக விசாரணைக்காக மன்னார்   காவல் லையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More