வட கொரிய ஜனாதிபதியின் சகோதரர் படுகொலை செய்யப்பட்டதையடுத்து, வடகொரிய மக்களுக்கு அனுமதித்திருந்த விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது. இக்கொலை தொடர்பாக இந்தோனேசியா மற்றும் வியட்நாமை சேர்ந்த 2 பெண்கள் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், வடகொரிய மக்களுக்கான விசா இல்லாத பயணச் சலுகையை மலேசிய அரசு ரத்து செய்துள்ளது. கிம் ஜாங்-நாம் கொலை தொடர்பாக சந்தேகத்தின்பேரில் பல வடகொரியர்களை மலேசிய காவல்துறை தேடி வரும் நிலையில், பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வடகொரியாவுக்கும் மலேசியாவுக்கும் பரஸ்பரம் விசா இன்றி பயணம் செய்யும் ஒப்பந்தம் ஒன்று இருந்தமை குறிப்பிடத்தக்கது. குறிப்பிடத்தக்கது.