Home இலங்கைவாய்ப்பை இழந்த இலங்கை

வாய்ப்பை இழந்த இலங்கை

by admin

 

2024 ஆம் ஆண்டில் 19 வயதிற்குட்பட்டோருக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை நடத்தும் வாய்ப்பை இலங்கை இழந்துள்ளது.  2024  ஜனவரி மாதம் இலங்கையில் நடைபெறவிருந்த   குறித்த போட்டியை இலங்கையில் இருந்து நீக்கி தென்னாபிரிக்காவிற்கு வழங்க சர்வதேச கிரிக்கெட் பேரவை இன்று செவ்வாய்க்கிழமை தீர்மானித்துள்ளது.

அஹமதாபாத்தில் தற்போது நடைபெற்று வரும் சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட மாநாட்டில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது . இதேவேளை குறித்த போட்யெில்  இலங்கை அணியை பங்குபற்ற வைப்து  தொடர்பில் இலங்கை கிரிக்கெட்  பேரவையின் தலைவர் ஷம்மி சில்வா கலந்துரையாடி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை கிரிக்கெட் பேரவையினன் நிர்வாகத்தில் அரசியல் செல்வாக்கு செலுத்தியதற்காக இலங்கை கிரிக்கெட் பேரவைக்கு  சர்வதேச கிரிக்கெட் பேரவை விதித்த தடை தொடர்ந்தும் அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More