Home இலங்கைகுளியறைகளுக்குள் கமரா பொருத்தியவர் விளக்கமறியலில்

குளியறைகளுக்குள் கமரா பொருத்தியவர் விளக்கமறியலில்

by admin

 

வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து குளியலறைக்குள் கமரா பொருத்தி வீடியோக்களை எடுத்து வீட்டாரை மிரட்டி வந்த நபர்  காவல்துறையினாினால் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகில் உள்ள வீடுகளுக்குள் இரவு வேளைகளில் அத்துமீறி நுழைந்து குளியறைகளில் கமராக்களை பொருத்தி , வீடியோ எடுத்து, இளைஞன் ஒருவர் வீட்டாரை மிரட்டி வந்துள்ளார்.  அது தொடர்பில் பாதிக்கப்பட்டவர்கள் , யாழ்ப்பாணம்  காவல்நிலையத்தின் சிறுவர் பெண்கள் பிரிவில் முறைப்பாடு செய்திருந்தனர்.
முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த மாவட்ட குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினர் , அப்பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு (CCTV) கமராக்களின் உதவியுடன் நபர் ஒருவர் அடையாளம் காணப்பட்டு , கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.
விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் யாழ்.நீதவான் நீதிமன்றில் இன்றைய தினம் புதன்கிழமை முற்படுத்தப்பட்ட நிலையில், 14 நாட்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More