2022ல் பிரித்தானியாவுக்கு இடம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை 7 லட்சத்து 45 ஆயிரம் என அரச புள்ளிவிபரம் வெளியாகி உள்ளது. 2022 ஆம் ஆண்டிற்கான இடம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 6லட்சத்து 6 ஆயிரம் என கடந்த மே மாதத்தில் கணிப்பிட்ட போதும் தற்போது 1லட்சத்து 39 ஆயிரத்தால் அதிகரித்துள்ளதாக திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, 6 லட்சத்து 72 ஆயிரம் பேர், 2023 ஜூன் வரையிலான 12 மாத காலத்தில் இடம்பெயர்ந்துள்ளதாக புதிய புள்ளிவிவரங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வகையில் பெரும்பாலான இடப்பெயர்வுகள் ஐரோப்பிய ஒன்றியம் அல்லாத நாடுகளிலிருந்து இடம்பெற்றதாகவும் அவர்களின் எண்ணிக்கை 9லட்சத்து 68ஆயிரம் பேர் எனவும் தெரிவிக்கட்டுள்ளது.
இதற்கிடையில் 2023ல் 36 ஆறாயிரம் பேர் தஞ்சம் கோரியுள்ளதாகவும், 2022ல் 89 ஆயிரம் பேர் தஞ்சம் கோரியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் 45 வீதமானவர்கள் சிறிய படகுகளில் பிரித்தானியாவை அடைந்தவர்கள் என கூட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை 2024ஆம் ஆண்டமுதல் முதுமானிப் பட்டம், கலாநிதிப்பட்ட படிப்பை மேற்கொள்பவர்கள் தவிர்த்து கல்விக்காக பிரித்தானியாவுக்கு இடம்பெயரும் மாணவர்கள் தமது துணைவர்களை குடும்பத்தவர்களை தங்கி வாழும் விசாவில் அழைத்து வர முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது.