Home இலங்கைஅண்மைய சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது – காவல்துறையினர்

அண்மைய சம்பவங்கள் தேசியப் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையாது – காவல்துறையினர்

by admin


அண்மைய நாட்களில் இடம்பெற்ற சில சம்பவங்கள் எந்த வகையிலும் தேசியப் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையப் போவதில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற காவல்துறை ஊடகப் பிரிவினர் இதனைத் தெரிவித்துள்ளனர்.

அண்மையில் களுத்துறையில், கல்கிஸ்ஸ நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்ற சம்பவங்களைக் கொண்டு நாட்டின் தேசியப் பாதுகாப்பிற்கு குந்தகம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட முடியாது என குறிப்பிட்டுள்ளனர். பாதாள உலகக்குழுக்களுக்கு இடையிலான மோதல்களை வேறும் விதமாக அர்த்தப்படுத்தி விடக்கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த சம்பவங்கள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருவதாகவும் விரைவில் நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More