Home இலங்கை நானாட்டான் -அரிப்புத்துறை பிரதான வீதியில்  விபத்து இளைஞன்   பலி

 நானாட்டான் -அரிப்புத்துறை பிரதான வீதியில்  விபத்து இளைஞன்   பலி

by admin

நானாட்டான் – முத்தரிப்புத்துறை பிரதான வீதியில் இடம் இன்று திங்கட்கிழமை (25) மாலை இடம்பெற்ற விபத்தில் இளைஞன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன் மேலும்  ஒரு இளைஞர் படுகாயமடைந்த  நிலையில் மன்னார்  மாவட்ட  பொது  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முசலி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள முத்தரிப்புத்துறை கிராமத்தில் இருந்து நானாட்டான் நோக்கி    இளைஞர்கள்  இருவா் பயணித்த    மோட்டார் சைக்கிள்  வளைவு ஒன்றில்    வேக கட்டுப்பாட்டை இழந்து   பாலத்தினுள் விழுந்து   விபத்து  ஏற்பட்டுள்ளது.

இதன் போது மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற முத்தரிப்புத்துறை கிராமத்தைச் சேர்ந்த வயது 28 வயதுடைய இளைஞர்   சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததோடு,மற்றைய இளைஞர் படுகாயமடைந்துள்ளார்.

படுகாயமடைந்த இளைஞர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டதுடன்  சடலம் உயிரிழந்தவரின் மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது. விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை முருங்கன்  காவல்துறையினா்  மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More