Home இலங்கை சுமாா் 7 இலட்சம் குடும்பங்கள்  உணவுக்காக கடன்பட்டுள்ளனா்

சுமாா் 7 இலட்சம் குடும்பங்கள்  உணவுக்காக கடன்பட்டுள்ளனா்

by admin

 

இலங்கையிலுள்ள 30  இலட்சத்து 29 ஆயிரத்து 300 கடன்பட்ட குடும்பங்களில்  6 இலட்சத்து 97 ஆயிரத்து 800 குடும்பங்கள் தமது அன்றாட உணவுத் தேவையை பூர்த்தி செய்யக் கடன் பொற வேண்டி உள்ளதாக மக்கள் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்தின் சமீபத்திய ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என  பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை பேராசிரியர்  வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளாா்.

மொத்தக் கடனாளிக் குடும்பங்களில் உணவுக்காக  கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 22.3 சதவீதமாக உள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.

6,97,800 குடும்பங்களைச் சோ்ந்த  1 இலட்சத்து 58ஆயிரத்து 200 பேர் தமது அன்றாட உணவுத் தேவையைப் பூர்த்தி செய்யக் கடனாளிகளாக உள்ளதாக அவா் குறிப்பிட்டுள்ளாா்.

மேலும் , கடனை மீளச் செலுத்துவதற்காக  சுமாா் 370,000 குடும்பங்கள் கடன் பெற்றுள்ளதாகவும், 4,91,000 குடும்பங்கள் பொருளாதார நடவடிக்கைகளுக்காக கடன் பெற்றுள்ளதாகவும்   தெரிவித்த அவா்  53,200 குடும்பங்கள் கட்டிடங்கள் கட்டுவதற்கும் புதுப்பிப்பதற்கும் கடன் பெற்றுள்ளதாகவும்  தொிவித்துள்ளாா்.

பொருளாதார நெருக்கடியின் பின்னர் (2022ஆம் ஆண்டிற்குப் பின்னர்) 6,88,000 குடும்பங்கள் கடனாளிகளாக மாறியுள்ளதாகத் தெரிவித்த  வசந்த அத்துகோரல, பெரும்பாலானோர் அடமானச் செயற்பாடுகள் மூலம் கடன் பெற்றுள்ளதாகவும் அடமான முறையில் கடன் பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை 9,70,000 எனவும்  தொிவித்துள்ளாா்.

இது தவிர வங்கிகளில் 97,000 குடும்பங்களும், நிதி நிறுவனங்களில் 2,72,250 குடும்பங்களும், பண தரகர்களிடம் 3,03,500 குடும்பங்களும் கடன் பெற்றுள்ளதாக  பேராசிரியர்  வசந்த அத்துகோரல    தொிவித்துள்ளாா்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More