Home இலங்கைதமது “யுக்திய” நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூரில் காவல்துறையினா் வழிபாடு

தமது “யுக்திய” நடவடிக்கைக்கு ஆசி வேண்டி நல்லூரில் காவல்துறையினா் வழிபாடு

by admin

 

நாடாளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் போதைப்பொருள் தடுப்பு விசேட செயற்திட்டமான “யுக்திய”  நடவடிக்கைக்கு ஆசி வேண்டி யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசாமி ஆலயத்தில்  காவல்துறையினா்  விசேட பூஜை வழிபாட்டில் ஈடுபட்டனர்.

பதில் காவல்துறை   மா அதிபரின் பணிப்புரைக்கிணங்க நாடு பூராகவும் போதைப்பொருள் ஒழிப்பு வேலை திட்டமாகிய யுத்திய  வேலை திட்டம் பொலிசாரால் நாடுபூராகவும்  முன்னெடுக்கப்பட்டு வருவதோடு  போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் போதைப்பொருள் கடத்துபவர்கள் என பலரும் காவல்துறையினரால்  கைது செய்யப்பட்டு வருகின்றனர்.

நிலையில் குறித்த யுக்திய நடவடிக்கைக்கு ஆசி வேண்டி வரலாற்றுப் பிரசித்தி பெற்ற நல்லூர் கந்தசாமி ஆலயத்தில் காவல்துறையினரால் விசேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டது

வழிபாட்டில் யாழ்ப்பாணம மாவட்ட பிரதி  காவல்துறை  மா அதிபர், யாழ்ப்பாண பிராந்திய சிரேஷ்ட அத்தியட்சகர், யாழ்ப்பாண பிராந்திய உதவி காவல்துறை  அத்தியட்சகர் , யாழ்ப்பாண  காவல்துறை  நிலைய பொறுப்பதிகாரி மற்றும்  காவல்துறை  உத்தியோகஸ்தர்கள் கலந்து கொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More