Home இலங்கைஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என்ற தீர்பு, வரலற்றில் முக்கியமானது!

ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என்ற தீர்பு, வரலற்றில் முக்கியமானது!

by admin

ஜனாதிபதி ஒருவருடைய பொது மன்னிப்பு செல்லுபடியற்றது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளமை இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாகும் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

முல்லைத்தீவு மாங்குளம் நீதிமன்றத்துக்கு பொதுமக்களின் காணி விடயம் தொடர்பான வழக்கு விசாரணை ஒன்றிற்காக எம்.ஏ. சுமந்திரன், புதன்கிழமை (17.01.24) சென்றிருந்தார். அவரிம், மேற்படி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தொடர்பில் கேள்வியெழுப்பிய போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷ, துமிந்த சில்வாவிற்கு கொடுத்த மன்னிப்பை புறந்தள்ளி அது தவறாக சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட மன்னிப்பு செல்லுபடியற்றது என்று தீர்ப்பளித்துள்ளது.

பாரத லக்‌ஷ்மன் பிரேமசந்திரவின் கொலை சம்பந்தமாக மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்ட துமிந்த சில்வாவிற்கே இந்த தீர்ப்பு கொடுக்கப்பட்டது. “மனுதாரர்களில் ஒருவரான ஹிருணிகா பிரேமசந்திர சார்பிலே நான் ஆஜராகி வாதாடி இருக்கின்றேன்.”

ஜனாதிபதி ஒருவருடைய மன்னிப்பு செல்லுபடியற்றது என நீதிமன்றம் இலங்கை சரித்திரத்திலே முதல் தடவையாக தீர்ப்பளித்து இருக்கின்றது. இது வரவேற்க வேண்டிய ஒரு விடயம், வேறு சில வழக்குகளும் நிலுவையிலே இருக்கின்றன.

விஷேடமாக மிருசுவில் படுகொலையாளி சுனில் ரட்நாயக்கவுக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ, கொடுத்த பொது மன்னிப்பையும் நாங்கள் சவாலுக்கு உட்படுத்தி இருக்கின்றோம். அந்த தீர்ப்பு இன்னும் வெளிவரவில்லை என மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More