உலகின் மிகப்பெரிய பயணிகள் சொகுசு கப்பலான ‘ஐகான் ஒஃப் தி சீஸ்’ தனது முதல் பயணத்தை ஆரம்பித்துள்ளது. புளோரிடாவின் மியாமியில் இருந்து தனது பயணத்தை ஆரம்பித்துள்ள குறித்த கப்பல் , கரீபியன் தீவுகளை 7 நாட்களுக்கு சுற்றி தனது முதல் பயணத்தை மேற்கொள்ளவுள்ளதாக தொிவிக்கப்பட்டுள்ளது.
ரோயல் கரீபியன் நிறுவனத்துக்குச் சொந்தமான இந்தக் கப்பல் 365 மீட்டர் நீளமும், 20 தளங்களும் கொண்டதாகவும், அதிகபட்சம் 7,600 பயணிகள் பயணிக்க கூடியதாகவும் அமைக்கப்பட்டுள்ளது. டைட்டானிக் கப்பலை விட ஐந்து மடங்கு பெரியதான இந்த கப்பலில் 07 நீச்சல் தடாகங்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த கப்பலின் மூலம் தீங்கு விளைவிக்கும் மீத்தேன் வாயு வெளியேறும் என்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது