இலங்கை தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது என நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
நேற்று (28.01.24) யாழில் ஊடக சந்திப்பில் கருத்து வெளியிட்ட அவர், தமிழ் கட்சிகள் தேசிய அரசாங்கத்துடன் இணைந்து அரசாங்கமாக செயற்பட மாட்டார்கள். தம்மை பொறுத்த வரையில் தாம் இணையப்போவதில்லை அது வேறு விடயம், ஆனால் மற்றைய கட்சிகள் இணைய வாய்ப்புக்கள் இருக்கலாம்.
தமிழரசுக்கட்சியின் தலைவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். அதிலும் சிக்கல் ஒன்று காணப்படுகிறது. அதன் மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
அதை விட முக்கியமான விடயம் தமிழரசுக்கட்சி இரண்டாக உடைந்து இருக்கிறது. அது இரண்டா, மூன்றாகவா என்று தெரியவில்லை ஆனால் உடைந்து இருக்கிறது என சித்தார்த்தன் குறிப்பிட்டுள்ளார்.