அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்பின் தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமாவின் பேச்சாளர் கெவின் லூயிஸ் ( kevin lewis) தெரிவித்துள்ளார். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ட்ராம்பின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்குமாறு கோரப்படவில்லை எனவும் வெள்ளை மாளிகையோ அப்போதைய ஜனாதிபதி பரக் ஒபாமாவோ இவ்வாறான ஒர் செயற்பாட்டுக்கு எப்போதும் உத்தரவிடவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, முன்னாள் ஜனாதிபதி பரக் ஒபாமா தமது தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டதாக தற்போதைய ஜனாதிபதி டொனால்ட் ட்ராம்ப் குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஆண்டின் ஒக்ரோபர் மாதமளவில் இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் இறுதிக் கட்ட தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்ட போது இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். டுவிட்டர் கணக்கில் இந்த விடயம் பற்றி அவர் பதிவுகளை இட்டுள்ளார்.
இவ்வாறு தொலைபேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டமை குறித்த சாட்சியங்கள் எதனையும் ட்ராம்ப் முன்வைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.