இலங்கையில் இருந்து அகதிகளாக ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 குழந்தைகள் உட்பட ஐந்து பேர் ஒன்றாம் மணல் தீடையில் தஞ்சமடைந்துள்ள நிலையில் இன்று புதன்கிழமை (7) காலை அவர்களை மீட்ட மரைன் காவல்துறையினா் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வவுனியா மாவட்டம் நெடுங்குழி பகுதியை நந்தகுமார் அவரது மனைவி மற்றும் அவரது 3 குழந்தைகள் ஆகியோரே
நேற்று (6) மாலை மன்னாரில் இருந்து ரூ.1.50லட்சம் கொடுத்து படகில் புறப்பட்டு இன்று (7) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள தனுஷ்கோடி அரிச்சல்முனை ஒன்றாம் மணல் திட்டில் கடற்கரையை சென்றடைந்துள்ளனா்.
பொருளாதார நெருக்கடி காரணமாக இலங்கையிலிருந்து தமிழகத்திற்கு சென்ற அகதிகளின் எண்ணிக்கை 293 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.