சிவகாசி அருகே வெம்பக்கோட்டையில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று நிகழ்ந்த வெடி விபத்தில் 10 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் படுகாயங்களுடன் மீட்கப்பட்ட 10க்கும் மேற்பட்டோர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த விபத்தில் 4க்கும் மேற்பட்ட அறைகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளதுடன் சம்பவ இடத்திலேயே 6 பெண்கள் 4 ஆண்கள் உள்பட 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
பட்டாசு ஆலையில் மணிமருந்து கலக்கும் போது உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டுள்ளது. காயமடைந்தவர்கள் பலரும் 90 சதவிகித காயங்களுடன் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது. பட்டாசுகள் மேலும் வெடித்து சிதறிக்கொண்டிருப்பதால் ஆலையில் இருந்த தொழிலாளர்கள் அனைவரையும் தீயணைப்பு படை வீரர்கள் வெளியேற்றியுள்ளனர்.