Home இலங்கைகோட்டாபயவின் பயிற்றுவிப்பாளா் ஹெரோயினுடன் கைது

கோட்டாபயவின் பயிற்றுவிப்பாளா் ஹெரோயினுடன் கைது

by admin

 

ஸ்ரீலங்கா இராணுவத்தின் கொமாண்டோ படையில் லான்ஸ் கோப்ரல் ஆக பணியாற்றிய முன்னாள் சிப்பாய் ஒருவர் இரண்டு கிராம் ஹெரோயினுடன் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டதாக கண்டி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்க்கு  மிக நெருக்கமானவரான குறித்த சந்தேக நபா்  முன்னாள் ஜனாதிபதியின் உடற் பயிற்சி பயிற்றுவிப்பாளராக கடமையாற்றியதுடன்   , கோட்டாபய   ஜனாதிபதி பதவியில் இருந்து வெளியேறிய பின்னர் இராணுவத்தை விட்டு வெளியேறியுள்ளதாக காவல்துறை  விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இரண்டு பிள்ளைகளின் தந்தையான இவர், யஹலதன்ன நெல்லிகல பிரதேசத்தில் வசிக்கும் 35 வயதுடையவர். ஹெரோயின் போதைப்பொருள் கடத்துவதாக  காவல்துறையினருக்கு கிடைத்த தகவலுக்கு அமைய  சந்தேகநபாின் வீட்டை  சோதனை செய்த போது  ஹெரோயின் போதைப்பொருளுடன்  சந்தேகநபர்  கைது செய்யப்பட்டதாக  காவல்துறையினா் தொிவித்துள்ளனா்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More