Home இலங்கைரஷ்ய இராணுவத்தில் கூலிப்படை – இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டனர்!

ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படை – இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டனர்!

by admin

உக்ரைன் இராணுவத்தினரால் நேற்று முன்தினம் (10.04.24) நடத்தப்பட்ட ஆளில்லா விமானத் தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தில் கூலிப்படையாக செயற்படும் இலங்கையர்கள் இருவர் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ரைனின் ஆக்கிரமிப்பு பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபடவிருந்த ரஷ்யப் படைகளை இலக்கு வைத்து உக்ரைன் இராணுவம் நடத்திய தாக்குதலில் இந்த இரண்டு இலங்கையர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த தாக்குதலில் ரஷ்ய இராணுவத்தைச் சேர்ந்த பலர் கொல்லப்பட்டதாக அந்நாட்டிலிருந்து கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எவ்வாறாயினும், உயிரிழந்த இலங்கையர்கள் இருவரும் சுற்றுலா விசாவில் ரஷ்யா சென்று அந்நாட்டு இராணுவத்தில் இணைந்துகொண்ட இலங்கை இராணுவத்தின் ஓய்வுபெற்ற  இருவர் என கூறப்படுகிறது.

ரஷ்ய இராணுவத்தில் துணை சேவை வேலைகள் என்று கூறி ஓய்வு பெற்ற இராணுவ வீரர்களை ரஷ்யாவுக்கு அழைத்துச் சென்று பணியில் அமர்த்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

மனித கடத்தல் குழுவொன்றினால் இந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்படுகின்றது. கடந்த காலங்களிலும், கூலிப் படையாக செயற்பட்ட பலர் இந்த போரில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More