Home இலங்கைகாங்கேசன்துறை கடற்கரையில், உயிர்காப்பு நீச்சல் பிரிவு செயற்பாடு ஆரம்பம்!

காங்கேசன்துறை கடற்கரையில், உயிர்காப்பு நீச்சல் பிரிவு செயற்பாடு ஆரம்பம்!

by admin

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பகுதியில் பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டது.

காங்கேசன்துறை கடற்கரைப் பகுதியில் உருவாக்கப்பட்ட நிலையத்தை வடக்கு மாகாண பிரதிப் காவவற்துறை  மா அதிபர் திலக்.சி.ஏ.தனபால இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (19.04.24)  திறந்துவைத்தார்.

கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது.

இதன்போது அப்பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் காவற்துறை  காவலரணும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய சிரேஷ்ட காவற்துறை  அத்தியட்சகர், உதவி காவற்துறை  அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய காவற்துறை  நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More