200
தொடர் காய்ச்சல் மற்றும் சத்தி காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமியை வைத்தியசாலைக்கு அழைத்து செல்லும் வழியில் சிறுமி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் – ஆவரங்கால் கிழக்கைச் சேர்ந்த ஜெயச்சந்திரன் சஸ்மிதா என்ற 5 வயதான சிறுமியே உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி சில தினங்களாக உடல்நலம் பாதிக்கப்பட்ட நிலையில் அச்சுவேலி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பி இருந்தார். இந்நிலையில் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை சிறுமியின் உடல்நலம் மேலும் பாதிக்கப்பட்ட நிலையில் , மீண்டும் அச்சுவேலி வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக பெற்றோர் அழைத்து சென்ற போது , வழியில் உயிரிழந்துள்ளார். உடற்கூற்று பரிசோதனைக்காக சிறுமியின் உடல் யாழ்.போதான வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Spread the love