Home இலங்கைமனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம்

மனிதவுரிமை ஆணைக்குழு அலுவலகம் இடமாற்றம்

by admin

 

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை  முதல் புதிய முகவரியில் இயங்கவுள்ளது. இதுவரை காலமும் இல.01, 3ஆம் குறுக்குத் தெரு, யாழ்ப்பாணம் எனும் முகவரியில் இயங்கிவந்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண அலுவலகம் இன்றைய தினம் புதன்கிழமை  முதல் இல. 42 கோவில் வீதி, யாழ்ப்பாணம் எனும் முகவரிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது

புதிய அலுவலகமானது பிரதான வீதியிலிருந்து கோவில் வீதியில் 150 மீற்றர் தூரத்திலும் – வைத்தியசாலை வீதியிலிருந்து பிரதான வீதியை நோக்கிய கோவில் வீதியில் 50 மீற்றர் தூரத்திலும் அமைந்துள்ளது என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண பிராந்திய இணைப்பாளர் த.கனகராஜ் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More