யுத்தத்தின் பின்னரான பிரச்சினைகளுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தீர்வு காணத் தவறிவிட்டதாக ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. யுத்தத்தின் பின்னராக பொருளாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படவில்லை என தெரிவித்த ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹாசீம் பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்டமைக்கான பாராட்டுதலை மஹிந்தவிற்கு வழங்கப்பட வேண்டிய அதேவேளை, அதன் பின்னரான பிரச்சினைகளுக்கு மஹிந்த தீர்வு காண முனைப்பு காட்டவில்லை என குறிப்பிட்டுள்ளார்.
வைத்தியசாலைகளை நிர்மானிப்பதன் மூலமும் கட்டடங்களை அமைப்பதன் மூலமும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என தெரிவித்துள்ள அவர் இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இரண்டு பிரதான கட்சிகளும் இணைந்து செயற்பட வேண்டியது அவசியமானது என அ குறிப்பிட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் நாடு பாரியளவில் கடன் பொறியில் சிக்கியமை அம்பலமாகியுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.