முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் மன்னாரைச் சேர்ந்த 20 சாமியார்கள் நேற்றைய தினம் புதன்கிழமை (1) மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் வைத்து மாலை அணிவிக்கப்பட்ட நிலையில் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.
மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் எதிர்வரும் 12ஆம் திகதி மண்டல பூஜையும் மதிய அன்னதானமும் வழங்கப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து எதிர்வரும் 15ம் திகதி மன்னார் செல்வநகர் அம்பாள் ஆலயத்தில் இருந்து முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை நோக்கி குறித்த சாமியார்கள் யாத்திரை ஆரம்பிக்க உள்ளனர்.
20 ஆம் திகதி காலை வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தை சென்றடைந்து தமது விரதத்தை பூர்த்தி செய்யவுள்ளனர்.