இலங்கை யுத்தக் குற்றச் செயல் விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளின் பங்களிப்பு அவசியமாகின்றது என ஐக்கிய நாடுகள் அமைப்பின் பெண்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை ஒழிக்கும் குழு கோரியுள்ளது. குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறும் பொறிமுறைமையில் சர்வதேச பங்களிப்பு மிகவும் அவசியமானது எனவும் பக்கச்சார்பற்ற சுயாதீன நீதி விசாரணைப் பொறிமுறைமை அவசியமானது எனவும் தெரிவித்துள்ளது.
இலங்கை தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சாட்சியாளர்களை பாதுகாப்பது தொடர்பிலான ஒர் பொறிமுறைமை உருவாக்கப்பட வேண்டியது அவசியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தொடர்ந்தும் அதிக எண்ணிக்கையில் படையினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் இதனை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.