Home இலங்கைபள்ளிமுனை கடலில் வல்லம் தாண்டு மீனவர் பலி.

பள்ளிமுனை கடலில் வல்லம் தாண்டு மீனவர் பலி.

by admin

 

மன்னார் பள்ளிமுனை கடற்பரப்பில் இருந்து இன்று திங்கட்கிழமை (13) மாலை  வள்ளத்தில் கடற்தொழிலுக்கு சென்ற குடும்பஸ்தர் ஒருவர் வள்ளம் தண்டத்தில் கடலில் விழுந்து உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மன்னார் பள்ளிமுனை மேற்கு பகுதியைச் சேர்ந்த எஸ்.ஏ.ஜான்சன் (வயது-62) என்ற குடும்பஸ்தர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர் உள்ளடங்களாக மேலும் சில மீனவர்கள் வள்ளம் ஒன்றில் தொழிலுக்குச் சென்ற போது  இன்று   மாலை 4 மணியளவில் திடீரென கடும் காற்று மற்றும் மழை பெய்துள்ளது. இதன் போது  மீனவர்கள் சென்ற வள்ளம் (படகு) கடலில் மூழ்கியது.  .இதன் போது ஏனையவர்கள் தப்பிய போதும் குறித்த குடும்பஸ்தரான மீனவர் கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளா.

உயிரிழந்தவரின் சடலம் மீட்கப்பட்டு மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.மேலதிக விசாரணைகளை மன்னார் வைத்தியசாலை  காவல்துறையினா் மேற்கொண்டு வருகின்றனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More