தமிழக மீனவர் இலங்கை கடற்படையினரால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரம் குறித்து இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இந்திய துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரியுடன் கலந்தரையாடியுள்ளார்.
அவ்வேளை மீனவர் கொலை சம்பவம் இனி தொடராது என ஜனாதிபதி உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இலங்கை கடற்படை, ராமேஸ்வரம் மீனவர்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பிரிட்ஜோ என்ற இளைஞர் உயிரிழந்ததுடன் மேலும் சரோன் என்பவர் காயமடைந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்தாவில் இடம்பெறும் 20-ஆவது இந்தியப் பெருங்கடல் கூட்டமைப்பு நாடுகளின் மாநாட்டில் இந்திய துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரியும் இலங்கை ஜனாதிபதி மைத்ரி பால சிறிசேனவும் கலந்து கொண்டுள்ள நிலையில் இந்தக் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.