275
யாழ்ப்பாணம் கோவில் வீதி எதிர்வரும் 19ஆம் திகதி தொடக்கம் ஜூலை மாதம் 03ஆம் திகதி வரையில் மூடப்பட்டு இருக்கும் என யாழ்.மாநகர ஆணையாளர் ச.கிருஷ்ணேந்திரன் அறிவித்துள்ளார்.
கைலாசபிள்ளையார் கோவிலுக்கு அருகில் இல. 331, கோவில் வீதி நல்லூர் என்னும் இடத்தில் நல்லூர் சைவத்தமிழ் பண்பாட்டுகூடல் அமைப்பின் அடையாள வளைவு அமைத்தல் வேலை முன்னெடுக்கப்படவுள்ளது.
அதனால் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஜூலை 3 ஆம் திகதி வரையான இருவார காலத்திற்கு கோவில் வீதியில் கைலாசப்பிள்ளையார் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் மூடவுள்ளது.
இக்காலத்தில் இவ் வீதியினை பயன்படுத்துவோர் போக்குவரத்தினை சிரமமன்றி மேற்கொள்ள மாற்றுப்பாதையினை பயன்படுத்துமாறு ஆணையாளர் அறிவித்துள்ளார்
Spread the love