Home இலங்கை(திருத்தம்) தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி பலி

(திருத்தம்) தாத்தா செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி பேத்தி பலி

by admin

 

தாத்தா  செலுத்திய உழவு இயந்திரத்தில் சிக்கி  பேத்தி உயிரிழந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை(13)  இரவு 7 மணியளவில் மன்னார் முருங்கன்  காவல்துறைப்பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருகையில்,,,

மன்னார் முருங்கன் காவல்துறைப் பிரிவிற்குட்பட்ட பூவரசங்குளம் பகுதியில் உள்ள விவசாயியான  தாத்தா  ஒருவர் தனது  வயலில் உழவு இயந்திரத்தின் ஊடாக உழுது கொண்டிருந்தார்.

இதன் போது உழவு இயந்திரத்தின் மக்காட் பகுதியில் அமர்ந்து கொண்டிருந்த அவரது 8 வயதுடைய  பேத்தி திடீரென கீழே விழுந்த நிலையில் உழவு இயந்திரத்தில் அகப்பட்டு உயிரிழந்துள்ளார்.

குறித்த சிறுமியின் சடலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை முருங்கன் காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

 

(56)
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More