Home இலங்கைபசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

பசில் ராஜபக்ஸவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்

by admin


முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்சவிற்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜீ.ஐ. குழாய் விநியோகத்தில் 36 மில்லியன் ரூபா துஸ்பிரயோகம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

பசில் ராஜபக்ஸ மற்றும் திவிநெகும திட்டத்தின் ஆணையாளர் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் இன்றைய தினம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. 20 லட்சம் ரூபா ரொக்கப் பிணை, 100 லட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணை ஆகியனவற்றின் அடிப்படையில் பசில் ராஜபக்ஸ மற்றும் கித்சிறி ரணவக்க ஆகியோருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மனிலால் வைத்தியதிலக்க உத்தரவிட்டுள்ளார். பிணைத் தொகைகளை எதிர்வரும் 29ம் திகதி செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More