ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராக செயற்படுவதைத் தடுக்கும் வகையில் நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்சவுக்கு விதிக்கப்பட்ட தடையுத்தரவை எதிர்வரும் 28ஆம் திகதி வரை நீடித்து கொழும்பு மேலதிக மாவட்ட நீதவான் திருமதி சாமரி வீரசூரிய இன்று வெள்ளிக்கிழமை (14) உத்தரவிட்டுள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தாக்கல் செய்துள்ள மனுவில், சரத் ஏக்கநாயக்க, கீர்த்தி உடவத்த மற்றும் விஜயதாச ராஜபக்ச ஆகியோா் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
தடை உத்தரவுக்கு எதிரான தரப்பினரின் ஆட்சேபனைகள் மற்றும் பதில்களை ஜூலை 18 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.