Home இலங்கையாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் தாயாரிடம் ஒப்படைப்பு

யாழ் காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த இந்திய சிறுவன் தாயாரிடம் ஒப்படைப்பு

by admin

 

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்து ,  காவல்நிலையத்தில் தஞ்சமடைந்த சிறுவன் மீள அவனது தாயாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளாா்.

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் வந்த சிறுவன் ஒருவன் , தனது தாய் மற்றும் தாயின் இரண்டாவது கணவர் ஆகியோர் தன்னை அடித்து சித்திரவதை புரிவதாக கூறி யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்திருந்தாா். .
சிறுவன் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது , சிறுவன் வடஇந்தியாவை சேர்ந்தவா் எனவும் , அவரது தாய் கொழும்பில் கஸீனோவில் வேலை செய்வதாகவும் , இங்கு இலங்கையை சேர்ந்த நபருடன் தங்கி இருப்பதும் தெரிய வந்துள்ளது.
அதேவேளை , சிறுவன் மன்னார் சென்று அங்கிருந்து கடல் வழியாக இந்தியா செல்வதற்கு திட்டமிட்டு , கொழும்பில் இருந்து வெளியேறி மன்னார் பேருந்தில் ஏறுவதற்கு பதிலாக யாழ்ப்பாணம் செல்லும் பேருந்தில் ஏறியமையால், யாழ்ப்பாணத்தை சென்றடைந்துள்ளார்.
 யாழ்ப்பாணம் வந்த சிறுவனுக்கு எங்கே செல்வது என தெரியாததால் , காவல் நிலையத்தில் தஞ்சமடைந்துள்ளாா் .
சிறுவனின் தாயை காவல்துறையினர் யாழ்ப்பாணம் அழைத்து விசாரணை செய்த வேளை சிறுவன் செய்யும் தவறுகளுக்குத்தான் சிறுவனை தண்டிப்பதாக கூறியுள்ளார்.
அதனை அடுத்து சிறுவனை சமரசப்படுத்தி, தாயாரையும் எச்சரித்த காவல்துறையினர் , சிறுவனை தாயாருடன் கொழும்புக்கு அனுப்பி வைத்துள்ளனர்
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More