Home இலங்கைவடக்கில் இரண்டு ஆணையாளர்கள் – பிரதிப் பிரதம செயலாளர் நியமிப்பு

வடக்கில் இரண்டு ஆணையாளர்கள் – பிரதிப் பிரதம செயலாளர் நியமிப்பு

by admin

வடக்கு மாகாணத்திற்கான இரண்டு திணைக்களங்களின் ஆணையாளர் பதவிக்கும், மாகாண பிரதி பிரதம செயலாளர் பதவிக்கும், புதிய அதிகாரிகள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான நியமனக் கடிதங்களை வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் இன்றைய தினம் புதன்கிழமை வழங்கிவைத்தார்.

வடக்கு மாகாண சிறுவர் நன்னடத்தை திணைக்களத்தின் ஆணையாளராக சி.சுஜீவாவும், வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளராக கு.காஞ்சனாவும், வடக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளராக (நிர்வாகம்) அ.யோ.எழிலரசியும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கான நியமனக் கடிதங்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More