நாட்டில் இடம்பெறும் கொலைகள் தொடர்பில் ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்திக் கொள்வதில் பயனில்லை என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
கொலைகள் இடம்பெற்ற பின்னர் அது தொடர்பான குற்றச்சாட்டுகளை வௌ;வேறு தரப்பினர் மீது முன்வைப்பதில் பலனில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் நேற்றைய தினம் நடைபெற்ற நிகழ்வொன்றில் கருத்து வெளியிட்ட அவர், நாட்டு மக்கள் தற்போது அதிக அழுத்தங்களுடன் உள்ளதாகவும், வடக்கு மக்களைப் போல தெற்கு மக்களும் அரசாங்கத்துக்கு எதிராக கோசம் எழுப்பி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்தின் கடமை, மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வதே அன்றி, மற்றவர்கள் மீது குற்றச்சாட்டுகளை முன்வைப்பது கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.